Saturday, May 19, 2012

ஆயிரமாண்டு பேசும் ஓராண்டு சாதனைகள்..இதோ

நான் 25 கோடி ரூபாய் விளம்பரதாரனில் அடக்கம் அல்ல..
நான் “ஜெ” யின் எதிரியோ “கானா”வின் ஆதரவாளனோ அல்ல
இந்த அரசின் முதலாண்டு சாதனை விளம்பரங்களை பார்த்த பின்பும்...
அதன் “வாசகங்களை “ படித்த பின்பும்...”விமர்சனமே செய்யக்கூடாது” என்று தான் இருந்தேன்

தினசரி “அரைத்த மாவையே”  துறைவாரியாக நம்பணத்தில் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுவதை பார்த்து பொறுக்காமல் பொங்கி எழுந்து விட்டேன்..விளைவு...உங்கள் தலைவிதி படிக்க வேண்டிய கட்டாயம்...இதோ..


விலையில்லா மிக்ஸியாம்
விலையில்லா மின்விசிறியாம்
இலவசத்துக்கு இப்படியொரு பெயர்
ஓசிக்கு மற்றுமொறு பெயர்

மின்  விசிறிக்கு  பதிலாக
பனை  விசிறி  தந்திருந்தால்
புழுக்கம்  பற ந்திருக்கும்
புஜமும் “பல”ந்திருக்கும்

வார்த்தை  ஜாலத்தில்
ஆட்சி  நகரலாம்
மின்சாரம்  இல்லாமல்
மிக்ஸி  நகருமா?

ஆறுமணி  நேரம்  மின்வெட்டு
பத்துமணி  நேரம்  ஆனது
இரண்டு  ரூபாய்  பஸ்டிக்கட்
ஆறு  ரூபாய்  ஆனது

இல்லாத  மின்  சாரத்துக்கு
சொல்லாமல்  கட்டண  உயர்வு
ஆயிரமாண்டு  பேசும்
ஓராண்டு  சாதனை  இதுதானோ

”குடிமக்கள்”  குஷி  குறைய
“சரக்கு”  விலையும்  உயர்ந்தது
தமிழகம்  முதலிடம்  பெற
“குடிஞர்”  வயதும்  குறைந்தது

ஆணுக்கு  நிகர்  பெண்ணென
“குடி” ”காரிகளும்” கூடினர்
ஆயிரமாண்டு  பேசும்
ஓராண்டு  சாதனை  இவைதானோ

இடுப்பு  வளைந்து  தலைவியை
முதுகு  குனிந்து  “அவதாரத்தை”
தலைகள்  கவிழ்ந்து  அன்னையை
மந்திரியும்  எம்.எல்.ஏயும்  செய்யும்

ரோடுஷோ  கூழை  கும்பிடு
பெண்ணின்  பெருமைக்கு  சான்றோ
ஆயிரமாண்டு  பேசும்
ஓராண்டு  சாதனை  இதுதானோ

Saturday, May 12, 2012

அனுதினமும் எமக்கு அன்னையர் தினமே



இன்று அன்னையர் தினமாம்
அப்படியானால் மற்ற நாட்கள்  ?
ஆங்கிலேயனுக்கு ஒரு நாள்தான்
நமக்கு தினம் தினமுமே..

காப்பியடிக்கும் கலையிலே நாம் வல்லவர்கள்
தொழிலிலே காப்பியடி  கோடிகளைச் சேர்
அரசியலில் காப்பியடி கேடிகளைச் சேர்
தொண்டில் காப்பியடி புண்ணியத்தைச் சேர்
ஆன்மீகத்தில் காப்பியடி ஆதீனமாக உயர்

உறவுகளில் காப்பியடித்தால் உண்மை சுருங்கும்
உண்மையை காப்பியடித்தால் பொய்மை பெருகும்
அன்னை என்பவள் நம் தொப்புள்கொடி பந்தம்
அவளுடைய உறவுநம் ஆயுள் பர்யந்தம்

ஒருநாளில் முடிவதில்லை அன்னையின் உறவு
உறவுக்கு ஒருதினம் இல்லைநம் மரபு
தாயாக தாரமாக தங்கையாக மகளாக
ஆயுள்முழுதும் போற்றுவதே நம்முடைய இயல்பு..